ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட ஆவணங்களின் செல்லுபடியாகும் காலத்தை மத்திய அரசு நீட்டித்துள்ளது.
மோட்டார் வாகனச் சட்டம் 1988, மத்திய மோட்டார் வாகன விதிகள் தொடர்பான ஆவணங்களின் செல்லுபடி காலத்தை நீட்டிப்பது தொடர்பாக சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் ஏற்கனவே மார்ச் 30, 2020, ஜூன் 9, 2020 மற்றும் ஆகஸ்ட் 24, 2020 தேதிகளில் மூன்று முறை காலக்கெடுவை நீட்டித்தது.
இந்நிலையில் ஓட்டுனர் உரிமம் உள்ளிட்ட வாகன ஆவணங்களின் செல்லுபடி காலத்தை மார்ச் 31 வரை நீட்டித்து மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. பிப்ரவரி 2020 முதல் காலாவதியாகும் சான்றிதழ்கள் அனைத்திற்கும் இது பொருந்தும் என தெரிவித்துள்ளது. அரசு அலுவலங்களில் கூட்ட நெரிசலை தவிர்க்கும் விதமாக நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.