பிரபல மலையாள நடிகர் திடீரென மரணமடைந்துள்ளது திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐயப்பனும் கோஷியும், கம்மா ட்டி பாடம் உள்ளிட்ட பல படங்களில் நடித்த பிரபல மலையாள நடிகர் அனில் நெடுமங்காட் மரணமடைந்தார். அவர் தன்னுடைய நண்பர்களுடன் மலங்கரா அணையில் குளித்துக் கொண்டிருந்த போது நீரின் சுழற்சியில் உள்ளிழுக்கப்பட்டு மூழ்கி மரணம் அடைந்துள்ளார். மலையாள படங்களில் இவர் நடிப்பு மிகவும் பெயர் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இவருடைய இந்த திடீர் மரணம் திரையுலகினர் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.