Categories
சினிமா தமிழ் சினிமா

BREAKING: பிரபல தயாரிப்பாளர் காலமானார் – பெரும் அதிர்ச்சி…!!

பிரபல தயாரிப்பாளர் கே.பி.ஃபிலிம்ஸ் பாலு மாரடைப்பு காரணமாக உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இயக்குநர் பி. வாசு இயக்கத்தில், நடிகர் பிரபு மற்றும் நடிகை குஷ்பூ நடிப்பில் திரையுலகில் சாதனை படைத்த சின்னதம்பி திரைப்படம் வெளியாகி 29 வருடங்கள் நிறைவடைந்துள்ளது. இன்றும் இந்த படம் மக்கள் மத்தியில் பேசும் படமாகவே இருக்கிறது. அந்த வகையில் சின்னத்தம்பி, பாஞ்சாலங்குறிச்சி, ஜானகிராமன் உள்ளிட்ட 15க்கும் மேற்பட்ட திரைப்படங்களை தயாரித்த பெருமை தயாரிப்பாளர் கே.பி.ஃபிலிம்ஸ் பாலுவையே சேரும்.

இவர் கொரோனா காரணமாக ஒரு மாத காலமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில் திடீரென்று மாரடைப்பு ஏற்பட்டு உயிர் இழந்துள்ளார். சமீபத்தில் நடந்து முடிந்த தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் இறப்பிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இது திரையுலகினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Categories

Tech |