Categories
சற்றுமுன் தூத்துக்குடி மாநில செய்திகள் மாவட்ட செய்திகள்

#BREAKING: தந்தை, மகன் மரணம் – டி.ஐ.ஜியிடம் ஆவணங்கள் ஒப்படைப்பு …!!

சாத்தான்குளம் தந்தை, மகன் மரணம் தொடர்பான ஆவணங்கள் நெல்லை டி.ஐ.ஜியிடம் ஒப்படைக்கப்பட்டது.

சாத்தான்குளம் ஜெயராஜ், பென்னிக்ஸ் மரணம் தொடர்பாக சிபிஐ விசாரணை  நடைபெற தாமதமாகும் என்பதால் அதுவரை சிபிசிஐடி விசாரிக்க வேண்டும் என்று உத்தரவிட்ட உயர்நீதிமன்ற மதுரை கிளை, நெல்லை சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார் இந்த வழக்கை விசாரிக்க வேண்டும் என்று தெரிவித்தது.

இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான ஆவணங்களை சிபிசிஐடி வசம் ஒப்படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. வழக்கு தொடர்பான ஆவணங்கள்,  நீதித்துறை நடுவரின் விசாரணை அறிக்கை, முதல்நிலை உடற்கூறு ஆய்வு அறிக்கை உள்ளிட்ட ஆவணங்களை நீதித்துறை பதிவாளர் இடம் இருந்து நெல்லை சரக டிஐஜி பெற்றுக் கொண்டார். அவர் அதனை எடுத்துச் சென்று சிபிசிஐடி டிஎஸ்பி அனில்குமார்ரிடம் வழங்க உள்ளார்.

Categories

Tech |