இன்று பிற்பகல் 12 மணிக்கு முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் மருத்துவத்துறை அமைச்சரோடு ஒரு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கொரோனா தொற்று பரவல் தொடர்பாகவும் சீனாவில் bf 7 வகை கொரோனா பிரிவு பரவி வருவதாகவும், அதனால் ஓர் இருவர் இந்தியாவிலும் பாதிக்கப்பட்டு இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. இது தொடர்பான ஆலோசனை கூட்டம் பிற்பகல் நடைபெற்ற நிலையில் தற்போது அது தொடர்பான செய்தி குறிப்பு வெளியாகி இருக்கிறது. தேவையற்ற அச்சம் வேண்டாம் என்று தமிழக அரசு அறிவித்து இருக்கிறது.