சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னையில் மக்களின் வசதிக்கு ஏற்றவாறு மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் வேலைக்கு செல்பவர்கள், மாணவர்கள் என அனைவரும் பயனடைந்து வந்தனர். இதையடுத்து மெட்ரோ ரயில் கட்டணம் கூடுதலாக வசூலிக்கப்பட்டதால் பொதுமக்கள் மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைக்குமாறு கோரிக்கை வைத்தனர். இந்நிலையில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று சென்னை மெட்ரோ ரயில் கட்டணத்தை குறைத்து முதல்வர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
அதன்படி மெட்ரோ ரயிலில் அதிகபட்ச கட்டணமான ரூபாய் 70 தற்போது ரூபாய் 50 ஆக குறைக்கப்பட்டுள்ளது. மேலும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் பொது விடுமுறை நாட்கள் கட்டணத்தில் இருந்து 50 தள்ளுபடி வழங்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார். நாளை மறுநாள் முதல் இந்த கட்டண குறைப்பு அமலுக்கு வருகிறது.