கொரோனா எதிரொலியால் தமிழகத்தில் 19-ம் தேதி முதல் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் ஒத்திவைப்பு தென்னிந்திய தொழிலாளர் சங்கம் தெரிவித்துள்ளது.
உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. இந்தியாவில் இந்த வைரஸ் தாக்கத்தால் 100க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டு 2 பேர் உயிரிழந்துள்ளனர்.பல்வேறு மாநிலங்களில் வேகமாக பரவி வரும் இந்த வைரஸை கட்டுப்படுத்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தமிழகத்தை பொறுத்தவரை மார்ச் 31ம் தேதி வரை பொதுமக்கள் யாரும் கூட்டமாக கூட வேண்டாம், தொடக்க பள்ளிகளுக்கு விடுமுறை, கர்நாடகா கேரளா எல்லை ஓரத்தில் உள்ள திரையரங்குக்கு , வணிக வளாகம் மூட உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.தமிழக அரசு கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கையை தீவிரப்படுத்தி வரும் நிலையில் அரசியல் கட்சிகள் , அமைப்புகள் அனைத்தும் நல்ல ஒத்துழைப்பை கொடுத்து வருகின்றனர்.
இந்நிலையில் தென்னிந்திய தொழிலாளர் சங்கம் தலைவர் ஆர்.கே செல்வமணி கூறும் போது , கொரோனா எதிரொலியால் தமிழகத்தில் 19-ம் தேதி முதல் அனைத்து விதமான படப்பிடிப்புகளும் ஒத்திவைப்பு, மறு அறிவிப்பு வரும் வரை படப்பிடிப்பு நடத்தப்படாது. 9,000 பேர் வரை பணியாற்றுகின்ற நிலையில் ஒருநாளைக்கு 40 படங்கள் படப்பிடிப்பு பாதிக்கப்படும் என்று ஆர்.கே செல்வமணி தெரிவித்தார்.