விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் 6 பேர் பரிதாபமாக பலியாயினர். சிப்பிபாறையில் அமைந்துள்ள ராஜம்மாள் பட்டாசு ஆலையில் பிற்பகலில் திடீர் விபத்து ஏற்பட்டது.
பட்டாசு ஆலை ஏற்பட்ட விபத்தில் காயமடைந்த 10-க்கும் மேற்பட்டவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தீயை கட்டுப்படுத்தும் பணியில் 4 தீயணைப்பு வாகனங்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளது. இந்த விபத்தில் 6 அறைகள் தரைமட்டம் ஆனது. கடும் வெயிலில் ஏற்பட்ட வெப்பத்தால் பட்டாசுகள் ஒன்றோடு ஒன்று உராய்வு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என்று கூறப்படுகிறது.