நாளை நடைபெற இருக்கும் ஊரடங்கு உத்தரவை கடைபிடிக்கும் வகையில் பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் நாளை முழுவதும் ஊரடங்கு உத்தரவு கடைபிடிக்க பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்திருந்தார். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியும் அதற்கான அறிவுறுத்தலை வழங்கியிருந்தார். நாளையதினம் பேருந்துகள் ஓடாது அறிவிக்கப்பட்டது. அதே போல இன்று முதலே பயணிகள் ரயில்கள் இயங்காது என்று ரயில்வே அறிவித்திருந்தது.
இந்நிலையில் சென்னையில் கடற்கரை முதல் வேளச்சேரி வரையிலான பறக்கும் ரயில் சேவை ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. சென்னை கடற்கரை முதல் செங்கல்பட்டு வரை மின்சார ரயில் ஒரு மணி நேரத்துக்கு ஒருமுறை மட்டுமே இயக்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.முன்னதாக மெட்ரோ இரயில் சேவை இயங்காது என்று நிர்வாகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.