Categories
சற்றுமுன் பல்சுவை மாநில செய்திகள் வானிலை

BREAKING: உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு ..!!

இன்று செய்தியாளர்களை சந்தித்த சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன், தென்மேற்கு வங்க கடல் பகுதி மற்றும் அதனை ஒட்டியுள்ள இந்திய கடல் பகுதியில் இன்று காலை குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இது அடுத்து வரும் 48 மணி நேரத்தில் சற்று வலுப்பெறக் கூடும். இது நவம்பர் 12ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் தமிழகம் – புதுவை கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.

இதன் காரணமாக தமிழகப் பகுதிகளில் 9ஆம் தேதி ஒரு சில இடங்களிலும், 10ஆம் தேதி அனேக இடங்களிலும், 11, 12, 13 தேதிகளில் பெரும்பாலான இடங்களிலும் மழை பெய்யக்கூடும். கனமழையை பொருத்தவரை 9,  10 தேதிகளில் ஓரிரு இடங்களில் கனமழையும், 11,  12 தேதிகளில் ஒரு சில இடங்களில் கன முதல் மிக கனமழையும், 13ஆம் தேதி ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்யக்கூடும். கடந்த 24 மணி நேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. அதிகபட்சமாக காரைக்காலில் 6 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.

மீனவர்களுக்கான எச்சரிக்கை பொறுத்தவரை வரும் நவம்பர் 12ஆம் தேதி வரை குமரிக்கடல்,  மன்னார்வளைகுடா, தமிழக கடலோரப் பகுதிகள்,  தெற்கு ஆந்திரா கடலோரப் பகுதிகள்,  தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள மத்திய மேற்கு வங்க கடல் பகுதிகளில் பலத்த காற்றானது  மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும்.

இந்த பகுதிகளில் பலத்த காற்றுடன் மழையும் பெய்யக்கூடும். எனவே மீனவர்கள் 12ஆம் தேதி வரை இந்த பகுதிகளுக்கு செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறார்கள். சென்னை மற்றும் புற நகரை பொறுத்தவரை 10ஆம்  தேதி ஒரு சில பகுதிகளில் கனமழையும்,  11,  12 தேதிகளில் ஒரு சில பகுதிகளில் கன முதல் மிக கனமழையும்,  13ஆம் தேதி ஒரு சில பகுதிகளில் கனமழையும் பெய்யக்கூடும் என தெரிவித்தார்.

Categories

Tech |