சென்னை மாநகராட்சியில் நாளை முதல் முழு ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும் என ஆணையர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. மக்கள் அத்தியாவசிய தேவைக்காக மட்டும் வெளியில் வர வேண்டும் என்று எச்சரித்துள்ளது.
சென்னை மாநகராட்சி ஆணையராக ககன்தீப் சிங் பேடி பொறுப்பேற்றுள்ளார். இதையடுத்து அவர் புதிய உத்தரவை பிறப்பித்துள்ளார். அதில் சென்னை மாநகராட்சியில் நாளை முதல் முழு ஊரடங்கு கடுமையாக பின்பற்றப்படும் என தெரிவித்துள்ளார். ஊரடங்கு விதிகளை மீறுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இதற்காக 30 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. சென்னையில் ஓரிரு நாளில் தடுப்பூசி முகாம்கள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.