Categories
சற்றுமுன் தேசிய செய்திகள்

Breaking : ஆந்திராவில் மீண்டும் விஷவாயு கசிவு – தனியார் நிறுவன மேலாளர் உயிரிழப்பு!

ஆந்திர மாநிலம் கர்னுலில் விஷவாயு கசிவு ஏற்பட்டு தனியார் நிறுவன மேலாளர் உயிரிழந்துள்ளார். நந்தியாலாவில் உள்ள எஸ்.பி.ஒய் அக்ரோ நிறுவனத்தில் அம்மோனியா டேங்கில் கசிவு ஏற்பட்டுள்ளது. டேங்கரில் இருந்து கசிந்த அம்மோனியம் வாயுவால் பாதிக்கப்பட்டு மேலாளர் சீனிவாசராவ் பரிதமாக உயிரிழந்துள்ளார்.

ஆலையில் ஏற்பட்ட ரசாயன கசிவால் சுற்றுவட்டார இடங்களில் உள்ள மக்கள் அச்சத்தில் உள்ளனர். அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு டெண்டர்கள் சம்பவ இடத்திற்கு வருகை தந்துள்ளனர். கடந்த மே மாதம் ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் ஏற்பட்ட விஷவாயு கசிவில் 12 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Categories

Tech |