Categories
தேசிய செய்திகள்

#Breaking: ஞானவாபி மசூதி விகாரம்: இந்து பெண்கள் கேவியட் மனு ..!!

உத்தரபிரதேசம் மாநிலம் வாரணாசியில் உள்ள காசி விஸ்வநாதர் கோவின் ஒரு பகுதி அருகே ஞானவாபி மசூதி அமைந்துள்ளது. அந்த மசூதியின் ஒரு சுவற்றில் அமைந்துள்ள செங்கார் கவுரி ஆலயத்தில் தினம்தோறும் வழிபாடு நடத்த வேண்டும் எனவும், அதற்கு நீதிமன்றம் அனுமதி தர வேண்டும் எனவும் இந்து சமுதாயத்தை சேர்ந்த 5 பெண்கள் மனு தாக்கல் செய்து இருந்தார்கள். இதை ஞானவாபி மசூதி கடுமையாக எதிர்த்திருந்தது.

மசூதி தரப்பைச் சேர்ந்தவர்கள் இந்த மனுவை உடனடியாக நிராகரிக்க வேண்டும் எனவும்,  இந்த மனு விசாரணைக்கு ஏற்றுக் கொள்ளக்கூடியது அல்ல எனவும், அவர்களுடைய வாதங்களை நீதிமன்றத்தின் முன் எடுத்து வைத்தார்கள். இது தொடர்பான விசாரணைகளுக்கு பிறகு 12ஆம் தேதி வாரணாசி மாவட்ட நீதிமன்றம் தனது தீர்ப்பை வழங்கி இருக்கிறது. இதிலே இந்து பெண்கள் தொடுத்த வழக்கை விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளலாம் என நீதிமன்றம் தெரிவித்திருக்கிறது.

அடுத்தபடியாக செப்டம்பர் 22ஆம் தேதி முதல் இந்த மனுவின் மீது விசாரணை நடைபெறும் எனவும் தெரிவித்திருக்கிறது. இது ஞானவாபி மசூதியின் ஒரு பகுதியின் சுவற்றில் அமைந்திருக்கும் செங்கார் கவுரி ஆலயம் தொடர்பான விவகாரம் என்றாலும், ஞானவாபி மசூதி உள்ளே சிவலிங்கம் இருக்கிறது. ஞானவாபி மசூதி இந்து கோவிலை ஆக்கிரமித்து கட்டப்பட்டது என்று தனியாக சர்ச்சை நடந்து இருக்கிறது.

ஆகவே தான் இந்த தீர்ப்பு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த  தீர்ப்பாக பார்க்கப்படுகிறது. ஹிந்து மனுதாரர்கள் தங்களுக்கு மிகப்பெரிய வெற்றி கிடைத்ததாக கருதி கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். அதே சமயத்திலே எதிர் தரப்பிலிருந்து மேல்முறையீடு செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

இந்நிலையில் இந்து பெண்கள் சார்பில் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் கேவியட் மனு  தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வாரணாசி கோட் உத்தரவை எதிர்த்து மனு தாக்கல் செய்தால் தங்கள் தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்ற கோரிக்கை வைத்து கேவியட் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Categories

Tech |