கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை மீண்டும் தொடங்கி நடைபெற்று வருகின்ற நிலையில் சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. சிசிடிவி பதிவில் கோகுல்ராஜ் உடன் இருப்பது நான் அல்ல என்று ஏற்கனவே அவர் சாட்சியம் அளித்து இருந்த நிலையில், சத்தியம் உண்மையை மட்டுமே பேச வேண்டும் என்று ஏற்கனவே அவரிடம் விசாரணை நடத்தப்பட்ட போது நீதிமன்றமானது கூறியிருந்த நிலையில்,
உண்மையை சொல்லவில்லை என்றால் நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் முன்பே கடந்த விசாரணையின் போது நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில் இன்றைய தினம் அவர் மீண்டும் விசாரணைக்கு ஆஜராக இருந்த சூழலில் சுவாதி மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.