தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.
கடந்த ஆண்டு அதிரடியாக உயர்ந்து வந்த தங்கத்தின் விலை 30 ஆயிரத்தை தாண்டியது . பின்னர் கடந்த சில வாரம் குறைய தொடங்கியது. பின்னர் ஏற்றம் , இறக்கம் என வாடிக்கையாளர்களுக்கு கண்ணாம்பூச்சி ஆட்டம் காட்டி வந்த தங்கம் விலை 2020_ஆண்டின் தொடக்கமான இன்று அதிரடியாக உயர்ந்து புதிய உச்சத்தை தொட்டது.
சென்னையில் ஆபரண தங்கம் கிராமுக்கு 57 ரூபாயும், சவரனுக்கு 456 ரூபாய்யும் உயர்ந்து பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 456 உயர்ந்து ரூ 30,344-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதே போல 22 காரட் 1 கிராம் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ 57 உயர்ந்து ரூ 3,793 _க்கு விற்பனை செய்யப்படுகின்றது. தங்கம் விலை உயர்ந்ததை போல வெள்ளியின் விலையும் அதிகரித்துள்ளது. ஒரு கிராம் வெள்ளி 0.70 காசுகள் உயர்ந்து ஒரு கிராமுக்கு ரூபாய் 51.10-க்கு விற்பனை செய்யப்படுகின்றது. தங்கம் விலை 30,000_த்தை தாண்டி புதிய உச்சம் தொட்டதால் பொதுமக்கள் வேதனை அடைந்துள்ளனர்.