சென்னையில் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் (22 கேரட்) விலை நேற்று (ஜன. 07) 425 ரூபாய் சரிந்த நிலையில் இன்று 528 ரூபாய் உயர்ந்து 31 ஆயிரத்து 432 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ. 66 உயர்ந்து 3 ஆயிரத்து 929 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல் வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ. 1.40 உயர்ந்து 52.60_க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஈரான் – அமெரிக்கா இடையே பதற்றமான சூழல் நிலவி வருவதால் சர்வதேச சந்தைகளில் நிலையற்ற தன்மை தொடர்ந்து வருகிறது. மத்திய கிழக்கு பகுதிகளில் போர் ஏற்படும் அபாயம் இருந்ததால், பங்குச் சந்தைகளில் உள்ள தங்கள் பங்குகளை தங்கம், கடன் பத்திரம் போன்றவற்றில் முதலீட்டாளர்கள் முதலீடு செய்தனர். இதனால் தங்கத்தின் விலை கடும் உயர்வை சந்தித்ததாக பங்குச் சந்தை நிபுணர்கள் கூறினர்.