Categories
பல்சுவை

#BREAKING : தங்கம் கிடுகிடு உயர்வு… பவுனுக்கு ரூ 640 உயர்ந்தது….!!

தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 640  அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்

கடந்த சில தினங்களாகவே ஆபரணத் தங்கத்தின் விலை ஏறுமுகமாகவே இருந்து வந்தது. குறிப்பிட்ட அளவு விலை ஏறுவதும் , இறங்குவதுமாக இருந்த தங்கத்தின் விலை நேற்று சவரனுக்கு 104 ரூபாய் உயர்ந்தது.மேலும் தொடர்ந்து அதிகரிக்கும் என்ற நிலையில் இன்று ஒரே நாளில் சவரனுக்கு ரூ 640 உயர்ந்து விற்பனை செய்யப்படுகின்றது.

சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ 640 உயர்ந்து 29,440_க்கு விற்பனை செய்யப்படுகின்றது. அதே 22 காரட் ஆபரணத் தங்கம் 1 கிராமூக்கு ரூ 80 உயர்ந்து ரூ 3680_க்கு  விற்பனை செய்யப்படுகின்றது.வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ 1 உயர்ந்து உயர்ந்து 49.20_க்கு விற்பனை செய்யப்படுகின்றது.  கடந்த 24 நாட்களில் ஆபரணத் தங்கத்தின் விலை 2960 வரை உயர்வு கண்டுள்ளது. இதனால் பொதுமக்கள் மீண்டும் அச்சம் அடைந்துள்ளனர்.

Categories

Tech |