தங்கமானது பொருளாதாரத்தில் முக்கிய பங்கை வகுக்கின்றது . குறிப்பாக பெண்கள் , ஆண்கள் என தங்கத்தின் மீதுள்ள மோகம் குறைவதில்லை. இன்றைய காலத்தில் பொருளாதாரத்தின் முன்னேற்றத்திற்கு தங்க வணிகம் பெரிதும் பயன்படுகின்றது . தங்கத்தின் மதிப்பு , தங்கத்தின் வர்த்தகம் பொருளாதாரத்தை தீர்மானிக்கும் சக்தியாக இருந்து வருகின்றது . தங்கத்தின் விலையும் நாளுக்கு நாள் ஏற்ற இறக்கமாக இருந்து வருவது வாடிக்கையாளர்களின் கவனத்தை பெறுகின்றது.
தொடர்ச்சியாக தங்கத்தின் விலை ஏற்றம் கண்டு வந்த நிலையில் சில நாட்களாக குறைந்தது முன்னதாக 31 ஆயிரம் ரூபாயை தாண்டியது. தற்போது மீண்டும் தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறது. சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு 304 ரூபாய் அதிகரித்து 30, 896 ரூபாய்க்கும் , ஒரு கிராம் ரூ 38 அதிகரித்து 3862 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது . அதேபோல் வெள்ளி கிராம் ஒன்றுக்கு ரூ 1 அதிகரித்து 51-க்கு விற்பனை செய்யபடுகின்றது.