அரசு பள்ளி மாணவர்கள் பழைய பஸ்பாஸ் இருந்தால் இலவசமாக பேருந்தில் பயணிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனவே தமிழகத்தில் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் மூடப்பட்டன. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன்வழியாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் பள்ளிகள் திறப்பு குறித்து பல்வேறு குழப்பங்கள் நிலவி வந்தன. அமைச்சர் செங்கோட்டையன் 10 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயமாக பொதுத் தேர்வு நடத்தப்படும் என்று உறுதியாக கூறினார். இதையடுத்து மாணவர்களின் பெற்றோர்களிடம் பள்ளி திறப்பு குறித்து கருத்து கேட்கலாம் என்று முடிவெடுக்கப்பட்டது.
இதையடுத்து பெற்றோர்களின் சம்மதத்துடன் வரும் 19ஆம் தேதி பள்ளிகள் திறக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு அரசு பள்ளி மாணவர்கள் சீருடை , பழைய பஸ் பாஸ் இருந்தால் பேருந்தில் இலவசமாக பயணிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 10 12ம் வகுப்புகளுக்கு நாளை முதல் பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் அறிவித்துள்ளார்.