Categories
மாநில செய்திகள்

Breaking: தமிழக அரசு, தனியார் பேருந்துகளில் – அரசு மகிழ்ச்சி அறிவிப்பு…!!

அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் 100% பயணிகள் பயணிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. இதில் பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் முகக் கவசம் அணிதல், சமூக இடைவெளியை கடைப்பிடித்தல் மற்றும் கைகளில் சனிடைசர் உபயோகித்தல் போன்ற கட்டுப்பாட்டு வழிமுறைகளை கடைபிடித்த பிறகுதான் பேருந்தில் பயணம் செய்ய வேண்டும் என்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டிருந்தது. மேலும் 60 சதவீத பயணிகள் தான் பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்நிலையில் அரசு, தனியார் பேருந்துகள், தொழிற்சாலைகள், பள்ளி மற்றும் கல்லூரி பேருந்துகளில் 100% இருக்கைகளில் பயணிக்க அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக பேருந்துகளில் 60% இருக்கைகளில் பயணிகள் பயணிக்க அனுமதிக்கப்பட்டிருந்தனர். தற்போது 100% இருக்கைகளில் பயணிக்கலாம் என தெரிவித்துள்ளது. மேலும் தேவைக்கேற்ப பேருந்து சேவைகளை அதிகரிக்கவும் அரசு போக்குவரத்து கழகத்திற்கு அனுமதி அளித்து அரசாணை வெளியிட்டுள்ளது.

Categories

Tech |