அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவப்படிப்பில் 7.5சதவீதம் உள் ஒதுக்கீடு மசோதாவுக்கு ஆளுநர் ஒப்புதல் வழங்கியுள்ளார்.
அரசு பள்ளி மாணவருக்கு மருத்துவ பட்டப்படிப்பில் 7.5 உள் ஒதுக்கீடு வழங்கும் சட்ட மசோதாவுக்கு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தற்போது ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த சட்ட மசோதா சட்டப்பேரவையில் கடந்த செப்டம்பர் 15-ஆம் தேதி தாக்கல் செய்யப்பட்டு, சட்டமாக இயற்றப்பட்டது. பின்னர் ஆளுநர் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இந்த நிலையில் ஆளுநரின் ஒப்புதலுக்காக கிட்டதட்ட 45 நாட்களுக்கு மேலாக தமிழக அரசு காத்துக் கொண்டிருந்த நிலையில், அவருடைய ஒப்புதல் கிடைப்பதில் தாமதம் ஆன நிலையில் நேற்றைய தினம் என்பது தமிழக அரசு அரசாணை நேரடியாக வெளியிட்டு இருந்த நிலையில் தற்போது ஆளுநர் அனுமதி வழங்கியுள்ளார்.