இன்று மாலை தமிழக ஆளுநர் டெல்லி செல்கிறார். முப்பதாம் தேதி மீண்டும் தமிழகம் திரும்புவார் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.
தமிழகத்தில் நிலவி வரக்கூடிய பல்வேறு சூழல் குறித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. ஏற்கனவே தமிழகத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பந்தமாக பாஜக தலைவர் அண்ணாமலை உள்துறை அமைச்சர் அமித்ஷாவிடம் புகார் அளித்திருக்கிறார்.
அதை தொடர்ந்து தமிழக ஆளுநர் டெல்லி செல்லக்கூடிய இந்த விஷயம் என்பது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகின்றது. தமிழகத்தில் தொடர்ச்சியாக பல்வேறு மாவட்டங்களிலும் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றது. குறிப்பாக கோவை, மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் உள்ளிட்ட பல மாவட்டங்களிலும் இந்த பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவங்கள் நடைபெற்று வருகிறது.
இந்த சம்பவத்தால் தமிழகத்தில் பதற்றமான சூழல் நிலவக்கூடிய நிலையில் தமிழக ஆளுநர் டெல்லி செல்கிறார். அங்கு உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தமிழகத்தில் தற்போது இருக்கக்கூடிய சூழல், இதுவரை எடுத்த நடவடிக்கைகள் குறித்து எல்லாம் பேச இருக்கிறார் என தகவல்கள் வெளியாகி இருக்கிறது.