கொரோனா காரணமாக பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு பட்டப்படிப்பு பயிலும் வரை கல்வி இலவசம் என்ற அறிவிப்பை முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
தமிழகத்தில் கடந்த மாதம் முதல் தொற்று தொடர்ந்து அதிகரித்துக் கொண்டு வந்தாலும், தற்போது அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக பல மாவட்டங்களில் தொற்று தொடர்ந்து குறைந்து கொண்டு வருகின்றது. மேலும் தற்போது ஜூன் 7 வரை முழு ஊரடங்கு நீட்டிப்பு முதல்வர் அறிவித்துள்ளார். பல மாநிலங்களில் கொரோனா தொற்றால் பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு அந்தந்த மாநிலங்கள் உதவி தொகையை அறிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் தற்போது தமிழகத்திலும் கொரோனா தொற்று காரணமாக பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு ரூபாய் 5 லட்சம் உடனடி நிவாரண தொகையாக வழங்கப்படும் என்று முதல்வர் அறிவித்துள்ளார். மேலும் ரூபாய் 5 லட்சம் வைப்பு தொகை 18 வயதில் வட்டியுடன் வழங்கப்படும். பட்டப்படிப்பு வரையிலான கல்வி, விடுதி கட்டணம் உள்ளிட்ட செலவினங்களை அரசு ஏற்கும் என்று முக ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு காரணமாக பெற்றோர்களை இழந்து தவிக்கும் குழந்தைகளுக்கு பெரிய ஆதரவாக இருக்கும் என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.