Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 2-ஏ முறைகேடு – மேலும் ஒருவர் கைது …!!

குரூப்-2ஏ தேர்வு முறைகேடு செய்த வழக்கில் சிபிசிஐடி போலீசார் மேலும் ஒருவரை கைது செய்துள்ளனர்.

குரூப்-2ஏ முறைகேடு தொடர்பாக மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டிருக்கிறார். சிபிசிஐடி போலீசார் அவரை கைது செய்திருக்கிறார்கள். தமிழகத்தில் குரூப் 4 , குரூப்-2ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக 30க்கும் மேற்பட்டோர் இதுவரை கைது செய்யப்பட்டு இருக்கக்கூடிய தருணத்தில் குரூப்-2ஏ தேர்வில் முறைகேடு செய்தது தொடர்பாக மேலும் ஒருவர் கைதாக்கியுள்ளார்.

நேற்று காலவர் சித்தாண்டி பூபதி கைது செய்யப்பட்ட நிலையில் 3ஆவது நபராக சென்னை எழிலகத்தில் வணிகவரித்துறை அலுவலகத்தில் உதவியாளராக வேலை பார்த்து வந்த கார்த்திக் என்பவரை  சிபிசிஐடி போலீசார் கைது செய்துள்ளனர். 7 தேர்வர்களிடம் 82.50 பெற்று சித்தாண்டி முறைகேடு செய்தது அம்பலம். வசூல் செய்த பணத்தை VAO நாராயணன் மூலம் முக்கிய குற்றவாளி ஜெயகுமாரிடம் சித்தாண்டி கொடுத்துள்ளார்.

Categories

Tech |