குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக நேற்று இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் இரண்டு பேரை CBCIDI போலீஸ் கைது செய்துள்ளது.
இந்நிலையில் குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கிய நிலையில் நேற்று 2 அரசு ஊழியர்களை சிபிசிஐடி போலீசார் கைது செய்தது.காவலர் சித்தாண்டி சகோதரரும் , காரைக்குடி பதிவாளர் அலுவலக உதவியாளருமான வேல்முருகன் கைது செய்யப்பட்டார்.
அதே போல சித்தாண்டி மூலம் பணம் கொடுத்து முறைகேடு செய்து தேர்ச்சி பெற்றதாக ஜெயராணி என்பவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஸ்ரீவில்லிபுத்தூரை சேர்ந்த ஜெயராணி நெல்லை பதிவாளர் அலுவலகத்தில் உதவியாளராக உள்ளார்.
இந்நிலையில் திருவண்ணாமலையை சேர்ந்த சுதாராணி , சென்னையை சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். முறைகேடு புகாரில் கைதான சுதாராணி திருவண்ணாமலை வட்டார போக்குவரத்து அலுவலக உதவியாளராக உள்ளார். சென்னை திருவிக நகரை சேர்ந்த விக்னேஷ் தலைமை செயலக ஊழியராக உள்ளார்.முக்கிய குற்றவாளியான ஜெயக்குமார் , சித்தாண்டியை தேடும் பணியில் தனிப்படை போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.