Categories
மாநில செய்திகள்

BREAKING : குரூப் 2ஏ முறைகேடு – 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவு …!!

குரூப் 2A முறைகேடு தொடர்பாக 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குரூப்-4 தேர்வில் முறைகேடு வெளியான நிலையில் கடந்த 2017 ஆம் ஆண்டு நடைபெற்ற டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்விலும் முறைகேடு செய்து வெற்றி பெற்றதாக தகவல்கள் வந்த நிலையில் குரூப் 2A முறைகேடு சம்பந்தமாக தேர்வில் வெற்றிபெற்று தற்போது அரசு பணியில் இருக்கக்கூடிய 20க்கும் மேற்பட்டோர் தலைமறைவாக இருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது.
ஏற்கனவே தலைமறைவாக உள்ள காவலர் சித்தாண்டி மீது 4 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து CBCIDI போலீசார் தேடி வரக் கூடிய நிலையில் தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது.

குரூப் 2A முறைகேட்டில்  தலைமை செயலக அதிகாரி உட்பட அரசு ஊழியர்கள் 5 பேர் கைதான நிலையில் நாமும் கைதாவோம் என்ற அச்சத்தில் அரசு பணியில் இருப்பவர்கள் தலைமறைவாகி உள்ளனர்.குரூப் 2 , குரூப் 2A முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி போலீசார் இதுவரை 21 பேரை கைது செய்துள்ளனர். அதில் குரூப்-4 முறைகேட்டில் 16 பேரைரும் ,  குரூப்-2A தேர்வு முறைகேட்டில் 5 பேரும் அடங்கும்.

Categories

Tech |