குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு குறித்த TNPSC அதிகாரிகள் போலீசிடம் ஆவணங்களை ஒப்படைத்த நிலையில் CBCID போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டு 99 பேருக்கு ஆயுள் தடை விதித்து TNPSC நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக 14 பேர் கைது செய்யப்பட்டதோடு CBCIDI போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர்.
இந்நிலையில் குரூப் 2A தேர்விலும் முறைகேடு நடந்துள்ளது என்ற செய்தி பெரிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ள நிலையில் TNPSC காவல்துறையை இன்று காலை நாடியது. குரூப் 2-ஏ முறைகேட்டு புகாரில் உரிய நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக டிஎன்பிஎஸ்சி தெரிவித்திருந்தது.
இந்நிலையில் குரூப் 2 ஏ தேர்வு முறைகேடு தொடர்பாக சிபிசிஐடி வழக்கு பதிவு செய்து விசாரணையை தொடங்கி இருக்கிறது. இது தொடர்பாக TNPSC கொடுத்த ஆவணங்களின் படி 42 பேரையும் நேரில் அழைத்து விசாரிக்க இருப்பதாக CBCID போலீசார் தெரிவித்துள்ளனர். ராமேஸ்வரத்தில் தேர்வு மையத்தில் தான் இந்த முறைகேடு நடந்துள்ளது என்று தெரிய வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.