குரூப் 4 முறைகேடு தொடர்பான வழக்கை CBCIDI விசாரணையில் இருந்து சிபிஐ_க்கு மாற்றுவது கோரிய வழக்கில் சிபிஐ_க்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது.
மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் முகமது ரஸ்பீக் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைகிளையில் பொதுநல வழக்கு ஒன்றை தாக்கல் செய்தார்.அதில் தமிழகத்தில் கடந்த ஆண்டு டிஎன்பிஎஸ்சி குரூப் 4 தேர்வை மாநிலம் முழுவதும் நடைபெற்றது. இதில் ராமேஸ்வரம் , கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதிய முதல் 100 இடங்களில் முறைகேடு செய்தது தெரியவந்தது. இது தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வருகின்றனர்.
இந்த முறைகேட்டில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு தொடர்பு இருப்பது குறித்து சிபிஐ விசாரித்தால் மட்டுமே முறைகேடு தொடர்பாக அனைத்து உண்மைகளும் உணர முடியும். ஆகவே அனைத்து உண்மைகளையும் கண்டறியவும் , நியாயமான விசாரணையை நடைபெறவும் சிபிசிஐடி போலீசாரிடமும் உள்ள இந்த விசாரணையை சிபிஐக்கு மாற்ற உத்தரவிட வேண்டும் என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி , ரவீந்திரன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் தரப்பில் அதிக நாட்களைச் செலவு செய்து படித்தவர்கள் இந்த முறைகேடு தொடர்பாக மிகுந்த துயரத்திற்கு ஆளாகியுள்ளனர். இந்த நிலையில் இந்த முறைகேட்டை மாநில அரசின் கீழ் விசாரித்துவரும் சிபிசிஐடி விசாரித்தால் விசாரணை முறையாக நடைபெறாது. ஆகவே விசாரணையை சிபிஐ வசம் ஒப்படைக்க வேண்டும் என வாதிடப்பட்டது.
அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞ்சர் விசாரணை முறையான பாதையிலே சென்றுகொண்டிருக்கிறது.ஆகவே சிபிஐ விசாரணைக்கு மாற்றத் தேவையில்லை என வாதிடப்பட்டது.இதையடுத்து நீதிபதிகள் சிபிஐக்கு நோட்டீஸ் அனுப்பியதோடு , வழக்கு விசாரணை குறித்து ஆவணங்களை சிபிசிஐடி கேட்டு இந்த வழக்கின் விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்து இருக்கிறார்கள்.