ஒரே தேர்வு மையத்தில் TNPSC எழுதியவர்கள் அடுத்தடுத்து 100 இடத்தை பிடித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நடந்து முடிந்த குரூப் 4 தேர்வு 5,575 மையங்களில் நடைபெற்றது. இந்த தேர்வை 16,29,865 பேர் எழுத அனுமதிக்கப்பட்டனர். தேர்வில் ஒரே மாவட்ட தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் தரவரிசையில் முதல் 100 இடங்கள் பிடித்துள்ளது சர்சையை ஏற்படுத்தியுள்ளது. சம்மந்தப்பட்ட மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அனைவருமே அந்த பட்டியலில் இருக்கிறார்கள். இவர்கள் அனைவரும் இராமநாதபுரம் மாவட்டத்தின் ராமேஸ்வரம் , கீழக்கரை ஆகிய தேர்வு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் என்று சொல்லப்படுகின்றது.
இந்த இரண்டு மையங்களில் தேர்வு எழுதியவர்கள் எப்படி ஒரே மாதிரி அடுத்தடுத்து 100 இடங்களை பிடிக்க முடியும் என்று சந்தேகம் எழுந்துள்ளது. இதுகுறித்து TNPSC தெரிவித்துள்ளதில் ஆவணங்களை சரி பார்த்த பின் விளக்கப்படும் என்று தெரிவித்துள்ளது. ஒரே மாவட்ட தேர்வு மையத்தில் தேர்வு எழுதியவர்கள் அடுத்தடுத்து 100 இடங்களை பிடித்தது தேர்வர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.