Categories
கல்வி மாநில செய்திகள்

BREAKING : குரூப்-4 தேர்வு: புதிய தேர்ச்சிப் பட்டியல் வெளியீடு ….!!

குரூப் 4 தேர்ச்சி பெற்றவர்களின் புதிய பட்டியலை TNPSC வெளியிட்டுள்ளது.

குரூப் 4 தேர்வில் ராமேஸ்வரம் மற்றும் கீழக்கரை தேர்வு மையத்தில் தேர்வெழுதியவர்கள் முறைகேடு செய்தது உறுதி செய்யப்பட்டு 99 பேருக்கு ஆயுள் தடை விதித்து TNPSC நடவடிக்கை எடுத்துள்ளது. இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டதோடு CBCIDI போலீசார் இதனை விசாரித்து வருகின்றனர்.

இந்நிலையில் குரூப் 4 தேர்வில் முறைகேடு தொடர்பாக 39 பேரின் பெயரை தவிர்த்து விட்டு புதிய தேர்ச்சி பட்டியலை TNPSC வெளியிட்டுள்ளது. தேர்ச்சிப் பட்டியலில் இடம் பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்புக்காக நாளை முதல் இணையத்தில் பதிவேற்றம் கொள்ளலாம் என்றும் TNPSC தெரிவித்துள்ளது.

Categories

Tech |