Categories
தேசிய செய்திகள்

#BREAKING : GST , கடன் மீதான வட்டி குறைப்பு – மத்திய அரசு அதிரடி…!!

GST குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதோடு கடன் மீதான வட்டி குறைக்க நடவடிக்கை எடுக்கப்படுமென்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் தெரிவித்துள்ளார்.

ஆட்டோ மொபைல் துறை கடும் வீழ்ச்சி அடைந்து இந்திய பொருளாதாரம் பெரும் சரிவை கண்டுள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்தன. இந்நிலையில் டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுகையில் , அமெரிக்க, சீன வர்த்தக யுத்தத்தால் உலக அளவில் பொருளாதார வளர்ச்சி மந்தமான சூழல் நிலவுகிறது. இந்தியா போன்ற வளரும் பொருளாதார நாட்டில் மட்டும் இந்த சிக்கல் இல்லை.உலகப் பொருளாதார வளர்ச்சி விகிதம் 3.2 சதவீதத்தில் இருந்து குறைக்கப்படலாம் உலக பொருளாதார வளர்ச்சி விகிதத்தை காட்டிலும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி விகிதம் நன்றாக உள்ளது.

உலக அளவில் பொருளாதார வளர்ச்சி மந்தமாகவே உள்ளது பிற நாடுகளுடன் ஒப்பிடுகையில் இந்தியாவின் பொருளாதார நிலவரம் சிறப்பாக உள்ளது.வரும் அக்டோபர் 1-ம் தேதியில் இருந்து வரி தொடர்பாக கொடுக்கப்படும் அனைத்து நோட்டீஸ்கள் மீதும், பதில் வந்த மூன்றே மாதத்தில் நடவடிக்கை எடுக்கப்படும். கடந்த 2014ல் இருந்து சீர்திருத்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகிறோம். மத்திய அரசின் முதன்மை பணியாக அதுவே உள்ளது, ஜி.எஸ். டி இன்னும் எளிமையாக்கப்படும். ஜி.எஸ்.டி கவுன்சிலோடு வரும் ஞாயிற்றுக்கிழமை கலந்தாலோசித்து , பணம் திரும்ப செலுத்தும் முறையில் உள்ள சிக்கல்கள் களையப்படும்.மேலும் கடன் வட்டி குறைய நடவடிக்கை எடுக்கப்படும் என்று பல்வேறு நடவடிக்கை குறித்து பேசி வருகின்றார்.

Categories

Tech |