முக கவசம் மற்றும் கிருமிநாசினியை அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும் என்ற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தாக்கம் ஏற்பட்டதையடுத்து முக கவசம் , சனிடைசர் ( கிருமிநாசினி ) தட்டுப்பாடு ஏற்பட கூடிய ஒரு நிலை இருக்கிறது. கொரோனாவை பொருத்தவரை முக கவசம் மற்றும் கிருமி நாசினி மிக முக்கிய அங்கமாக இருந்து வரும் நிலையில் கடைகளில் அதிக விலைக்கு விற்பனை செய்வதாக புகார்கள் வந்து கொண்டிருந்தது.
சென்னையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு கூட முக கவசம் மற்றும் கிருமி நாசினிகளை அதிக விலைக்கு விற்பதாக எழுந்த புகாரையடுத்து சம்மந்தப்பட்ட கடைக்கு சென்னை மாநகராட்சி சார்பில் சீல் வைக்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரக்கூடிய நிலையில் முக கவசம் மற்றும் கிருமி நாசினிகளை அதிக விலைக்கு விற்றால் குண்டர் சட்டம் பாயும் என ஒரு எச்சரிக்கையை தமிழக நுகர்வோர் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.