சென்னையில் அடுத்த 2 மணி நேரத்துக்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
சென்னையில் 2 மணி நேரத்திற்கு கனமழை தொடரும் என வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. சென்னையில் அரை மணி நேரத்திற்கு மேலாகவே தொடர்ந்து இடியுடன் கூடிய கனமழை பொழிந்து வருகிறது. இந்நிலையில் தொடர்ந்து இரண்டு மணி நேரத்திற்கு சென்னையில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது.
சென்னை மட்டும் இன்றி திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களிலும் கன மழை பெய்து வருகிறது. இந்நிலையில் அந்த மாவட்டங்களிலும் கன மழை தொடரும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. சென்னையில் ஈக்காட்டுத்தாங்கல், வடபழனி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக இடியுடன் கூடிய கனமழை பொழிந்து வருகிறது. தமிழகத்தில் மேலும் இரண்டு நாட்கள் மழை தொடரும் என்றும், இன்றைய தினம் 15 மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று முன்னதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.