Categories
அரசியல் மாநில செய்திகள்

#BREAKING: ”ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ்” எடப்பாடி அதிரடி…. கதிகலங்கும் எதிர்க்கட்சி…!!

தமிழகத்தில் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் அறிமுகப்படுத்தப்படுமென்று லண்டனில் தமிழக முதல்வர் தெரிவித்துள்ளார்.

தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சென்னையிலிருந்து புறப்பட்டு லண்டன் சென்றடைந்தார். அவருக்கு அங்குள்ள தமிழ் அமைப்புகள் சிறப்பான வரவேற்பு  அளித்துள்ளார்கள்.இதை தொடர்ந்து முதல்வர் மூன்று நாட்கள் லண்டனில் தங்கி பல்வேறு நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் பங்கேற்கிறார்.

முதல்நாளான இன்று காலை இரண்டு  ஒப்பந்தங்களில் தமிழக முதல்வர் கையெழுத்திட்டார். அதில் மலேரியா போன்ற தொற்று நோய்களை ஏற்படுத்தும் கொசுக்களை முழுமையாக கட்டுப்படுத்தும் ஒப்பந்தமும் , மருத்துவர்கள் , மருத்துவ பணியாளர் பணி தரத்தை மேம்படுத்த சர்வதேச மனித மேம்பாட்டுத் துறையுடன் ஒப்பந்தம் கையெழுத்தாகியது.

மாலை லண்டனில் உள்ள கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் நிறுவ புத்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாக்கியது. பின்னர் கிங்ஸ் மருத்துவ கல்லூரி அரங்கில் மருத்துவர்களிடம்  பேசிய தமிழக முதல்வர், கிங்ஸ் மருத்துவமனையின் கிளையை தமிழகத்தில் அமைக்க அரசு முழு ஒத்துழைப்பு வழங்கும்  என்றும் ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதி ஏற்படுத்தப்படும்  என்றும் முதல்வர் பேசினார்.

முதல்வர் வெளிநாட்டு முதலீடு என்ன கொண்டுவர போகின்றார் என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்த  நிலையில் தற்போது  ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் வசதி செய்யப்படும் என்ற முதல்வரின் அறிவிப்பு எதிர்கட்சியினரை கதி கலங்க வைத்துள்ளது. ஹெலிகாப்டர் ஆம்புலன்ஸ் என்பது இந்தியாவிலே இல்லாத ஒரு புது முயற்சி என்று அதிமுகவினர் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Categories

Tech |