தமிழக சட்டப்பேரவை தேர்தல் நடக்க இன்னும் சில மாதங்கள் உள்ளன. இதையடுத்து அரசியல் கட்சிகள் தங்கள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக தொடங்கியுள்ளனர். இதனால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. இந்நிலையில் சசிகலா விடுதலைக்குப் பிறகு அதிமுகவில் பிளவு ஏற்பட வாய்ப்பிருக்கிறது என்று எதிர்பார்க்கப்பட் டு வருகிறது. சசிகலா விடுதலை செய்யப்பட்ட பின்னர், முன்னதாக ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டபோது அவருடைய காரில் அதிமுக கட்சி கொடி இருந்தது அதிமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சசிகலா தமிழகம் வருகை பெரிய நிகழ்வாகியா பெருமை இபிஎஸ் -ஓபிஎஸ் தலைமையிலான அதிமுக அரசை சேரும். கொடி பற்றிய சர்ச்சை, ஜெயலலிதா நினைவிடம் மற்றும் வேதா இல்லம் மூடல், பேரணிக்கு தடை என சசிகலாவை எதிர்ப்பதாக இவர்கள் எடுக்கும் நடவடிக்கைகள் உண்மையில் சசிகலாவுக்கு ஊடக வெளிச்சத்தை கொடுத்துள்ளதுடன், அவரை பார்த்து அதிமுக தலைமை அச்சப்படுவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.