மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 12 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, ஒரு லிட்டர் சமையல் எண்ணெய் வழங்க தமிழக முதலமைச்சர் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.
கொரோனா நோய்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை தமிழக அரசு எடுத்து வரும் நிலையில், பொது மக்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படக்கூடாது என்ற வகையில் பல்வேறு அறிவிப்பு, சலுகைகளை வழங்கி வருகின்றது. குறிப்பாக அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும், கட்டுமான தொழிலாளர்கள், அமைப்பு சாரா தொழிலாளர்கள் என பலருக்கும் நிவாரண உதவியும் அத்தியாவசிய பொருட்களும் தமிழக அரசால் வழங்கப்பட்டது.
இந்நிலையில் தமிழகத்தில் இருக்கும் 4022 மூன்றாம் பாலினத்தவர்களுக்கு குடும்ப அட்டை இல்லை என்றாலும் நிவாரண உதவி வழங்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டது. இதையடுத்து தற்போது குடும்ப அட்டை இல்லாத மூன்றாம் பாலினத்தவர்களுக்கு 12 கிலோ அரிசி, ஒரு கிலோ பருப்பு, சமையல் எண்ணெய் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார் .