Categories
தேசிய செய்திகள்

#BREAKING: ஹிஜாப் வழக்கு – நீதிபதி பரபரப்பு தீர்ப்பு …!!

கர்நாடகாவில் ஹிஜாப் அணிவதற்கு ஆதரவாக ஒரு நீதிபத,  ஒரு நீதிபதி ஹிஜாபுக்கு எதிராகவும் தீர்ப்புகளை வழங்கி இருக்கிறார்.

ஹிஜாப் அணிந்து வருவது இஸ்லாத்துடைய அடிப்படையான அம்சமா ? அதை ஒரு மாநில அரசு கட்டுப்படுத்த முடியுமா ? பள்ளி மற்றும் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை எந்த வகையில் விதிக்க முடியும் ?  இதுபோன்ற இன்னும் நிறைய கேள்விகள் பொது மக்களான நமக்கும் சரி, வழக்கறிஞர்களுக்கும் சரி, அரசுக்கும் சரி, நீதிபதிகளுக்கும்.

இந்த கேள்விக்கான பதிலை தேடிதான் கிட்டத்தட்ட 2 மாதமாக இந்த வழக்கானது உச்சநீதிமன்றத்தில் வெவ்வேறு தருணங்களில் நடந்து வந்தது. இரு நீதிபதி அமர்வில் தான் இது நடந்து வந்தது. ஹேமந்த் குப்தா,  சுதான்ஷீ துலியா அடங்கிய  இரு நீதிபதிகளை அமர்வில் இந்த வழக்கு விசாரணை நடந்து வந்த நிலையில், ஹேமந்த் குப்தாஅவர்கள் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதிக்கணும்னு சொன்ன கர்நாடக மாநில அரசின் முடிவை ஏற்றுள்ளார்.

மாநில அரசினுடைய முடிவை எதிர்த்து தொடரப்பட்ட மேல்முறையீட்டு மனுக்களை தள்ளுபடி செய்துள்ளார். அதே நேரத்துல மற்றொரு நீதிபதியான சுதான்ஷீ துலியா அவர்கள், அரசின் முடிவுக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்.கர்நாடகாவில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் ஹிஜாப் அணிந்து வருவதற்கு தடை விதித்த மாநில அரசின் முடிவை அவர் ரத்து செய்து இருக்கிறார்.மேல்முறையீட்டை ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த மாதிரி இரண்டு நீதிபதிகளும் வெறு வெறு கருத்துக்களை வழங்கியிருப்பதால் என்ன ஆகும் என்பது தான் அடுத்து பார்க்க வேண்டியதாக இருக்கிறது.

Categories

Tech |