Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

BREAKING : ”பி.ப் 5இல் விடுமுறை” மாணவர்கள் உற்சாகம் ….!!

தஞ்சை மாவட்டத்திற்கு பிப்ரவரி 5ஆம் தேதி விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தஞ்சையை ஆட்சி செய்த ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட பெரியகோவில் உலக பாரம்பரிய சின்னமாக விளங்கி வருகிறது. வரலாற்று சிறப்புமிக்க சுற்றுலாத் தலமாகவும் இருக்கும் பெரிய கோவிலில் 22 ஆண்டுகளுக்குப் பிறகு பிப்ரவரி 5ஆம் தேதி குடமுழுக்கு திருவிழா நடைபெற இருக்கின்றது.

இதற்கு தமிழகம் மட்டுமல்லாமல் நாட்டின் பல்வேறு பகுதியில் உள்ள ஏராளமான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். மக்களின் கூட்டம் தஞ்சையில் அதிகமாக இருக்க வாய்ப்புள்ளதால் தஞ்சை மாவட்டத்திற்கு பிப் 5ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

Categories

Tech |