Categories
மாநில செய்திகள்

BREAKING : தமிழகத்தில் எல்கேஜி மற்றும் யுகேஜி படிக்கும் மாணவர்களுக்கு விடுமுறை!

கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் பரவி அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய கொரோனா வைரஸ் 100க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியிருக்கிறது. இந்தியாவிலும் கொரோனா குடியேறி அச்சுறுத்து வருகின்றது. தற்போது இதன் தீவிர தன்மை இந்தியாவிலும் படிப்படியாக அதிகரித்து வருகின்றது. இதனை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. தமிழகத்திலும் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும்  எல்கேஜி மற்றும் யுகேஜி படிக்கும் மாணவர்களுக்கு வரும் 16ஆம் தேதி முதல்31 ஆம் தேதி வரை  விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தேனி, கோவை, திருப்பூர், நீலகிரி மாவட்டங்களில் 5ஆம் வகுப்பு வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனாவின் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

Categories

Tech |