டெல்லி மாநாட்டில் பங்கேற்று சேலம் திரும்பி வீட்டுக்கு தனிமைப்படுத்தப்பட்ட நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. டெல்லி மாநாட்டில் பங்கேற்று தமிழகம் திரும்பிய ஏராளமானோருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்ட நிலையில் தமிழகத்தில் கொரோனாவால் பாதித்தவர்களின் எண்ணிக்கை 300க்கும் அதிகமாகியுள்ளது. கொரோனா பாதித்த 6 பேர் குணமடைந்த நிலையில் ஒருவர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில் டெல்லி மாநாட்டில் பங்கேற்ற பலரையும் கண்காணித்து, அவர்களை தனிமைப்படுத்தி உரிய சிகிச்சைகளை தமிழக சுகாதாரத்துறை வழங்கி வருகிறது. அந்த வகையில் டெல்லி மாநாட்டில் கலந்துகொண்டு சேலம் திரும்பிய நபர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
டெல்லி மாநாட்டில் பங்கேற்று விட்டு மார்ச் 24 சேலம் திரும்பியவர் வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டு இருந்தார். தனது வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு இருந்த 58 வயதான நபர் திடீரென உயிரிழந்துள்ளார்.