எல்.இ.டி பல்புகள் வாங்கியதில் பெரிய ஊழல் நடந்திருப்பதாக தற்போது தகவல் வெளியே வர தொடங்கி இருக்கின்றது.
தமிழகம் முழுவதும் உள்ள தெருவிளக்குகள் led விளக்குகளாக மாற்றக்கூடிய திட்டமானது கடந்த அதிமுக ஆட்சியில் 2015 – 18 ஆம் ஆண்டில் அதிகளவில் மேற்கொள்ளப்பட்டது. அதில் கொள்முதல் செய்யப்பட்ட பல்புகள் உடைய விலை என்பது சந்தை விலையை விட பல மடங்கிற்கு கூடுதல் விலைக்கு வாங்கி இருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. தமிழக முழுவதும் இருக்கக்கூடிய பல்வேறு கிராமங்களுக்கும் இந்த தெரு விளக்குகள் அடிக்கடி மாற்றப்பட்டு அகற்றுவதில் புதிய பல்புகள் மாற்றப்படுவது வழக்கம்.
இதற்காக வழக்கமாக ஊராட்சி மன்றத்துக்கான நிதி என்பது ஒதுக்கப்படும். அந்த நிதியின் வாயிலாக தான் இந்த மின்சார பல்புகள் மாற்றம் செய்வார்கள். ஆனால் கடந்த 10 ஆண்டுகளாக உள்ளாட்சி மன்ற தேர்தல் என்பது நடைபெறாமல் இருந்த காலகட்டத்திலே சுமார் 8, 9 ஆண்டுகளாக ஊராட்சி மன்ற தலைவரே இல்லாமல் தான் ஊராட்சிகள் இருந்து வந்தன.அந்த காலகட்டங்களிலே ஊராட்சி நிர்வாகங்களை அதற்கென்ற அதிகாரிகள் கவனித்து வந்தார்கள்.
அந்த காலகட்டத்தில் பல ஊழல் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக தகவல் அப்போது வெளிவந்த வண்ணமாக இருந்தது. கிராமப்புறங்களில் உள்ள தெருவிளக்குகளை led விளக்குகளாக மாற்றினால் மின் தேவை குறையும் என்ற ஒரு புதிய திட்டமானது அறிமுகப்படுத்தப்பட்டது.
அனைத்து தெருவிளக்குகளை எல்இடி விளக்குகளாக மாற்றுவதற்கு 875 கோடி ரூபாய் அப்போது ஒதுக்கீடு செய்யப்பட்டது. கடந்த 2015 – 2018 ஆம் ஆண்டு வரை இந்த தெரு விளக்குகள் led விளக்குகளாக மாற்றக்கூடிய திட்டம் என்பது தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டது. 600 ரூபாய் சந்தை மதிப்புள்ள எல்இடி விளக்குகளை 4500 ரூபாய் கொடுத்து வாங்கியதாக புகார் எழுந்திருக்கிறது.
அந்த வகையில் ஒரு பல்பு வாங்குவதற்கு சுமார் 3900 ரூபாய் கூடுதலாக அரசாங்கம் செலவு செய்துள்ளது. இது மிகவும் காஸ்ட்லியான ஒரு பல்பு என்று சொல்லி அது அப்போது வாங்கப்பட்டது. ஆனால் அதனுடைய சந்தை மதிப்பு விலை என்பது வெறும் 600 ரூபாய். இந்த குற்றசாட்டு தொடர்பாக தான் தற்போது முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி மீது FIR பதிவு செய்யப்பட்டு, தற்போது லஞ்ச ஒழிப்புத்துறை அவர் வீட்டில் சோதனை நடத்தி வருகின்றார்கள்.