நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை உதித் சூர்யாவின் தந்தை ஒப்புக்கொண்டதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.
நீட் தேர்வில் முறைகேட்டில் ஈடுபட்ட மாணவன் உதித் சூர்யா நேற்று குடும்பத்துடன் தனிப்படை போலீசாரால் கைது செய்யப்பட்டார். இதை தொடர்ந்து சென்னை எழும்பூரில் உள்ள CBCID போலீஸ் தலைமையகத்தில் வைத்து விசாரணை மேற்கொண்ட பின் நேற்று இரவு மாணவன் உதித் சூர்யா , அவரின் தந்தை , தாய் ஆகியோரை தனி படை போலீஸ் மற்றும் CBI போலீசார் தேனி அழைத்து வந்தனர்.இன்று காலை தேனி மருத்துவ கல்லுரி முதல்வர் மற்றும் துணை முதல்வரிடம் CBCID போலீசார் விசாரணை நடத்தினர்.
பின்னர் மாணவனின் தந்தை மற்றும் தாய்யிடம் விசாரணை நடத்திய CBCID போலீசார் மாணவன் உதித் சூர்யாவிடமும் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்ததை உதித் சூர்யாவின் தந்தை ஒப்புக்கொண்டதாக சிபிசிஐடி போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர். அதில் தனது மகனை மருத்துவர் ஆக்க வேண்டும் என்ற ஆசையில் பின்விளைவுகள் பற்றி சிந்திக்காமல் ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்த்ததாக உதித் சூர்யா தந்தை ஒப்புதல் அளித்துள்ளார்.