Categories
தேசிய செய்திகள் மாநில செய்திகள்

BREAKING : மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம்

மணிப்பூர் ஆளுநராக இல.கணேசன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்..

பாரதிய ஜனதா கட்சியின் மூத்த தலைவராக இருக்கக் கூடிய தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன் அவர்களை தற்போது மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக நியமனம் செய்து குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவினை பிறப்பித்துள்ளார்.. கடந்த சில நாட்களுக்கு முன்பாக தான் பெரும்பாலான மாநிலத்தின் ஆளுநர் மாற்றம் செய்யப்பட்டிருந்தது..

அப்போது தமிழகத்தைச் சேர்ந்த யாரேனும் ஒருவருக்கு வாய்ப்பு கிடைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது அந்த வாய்ப்பு தஞ்சையை சேர்ந்த 76 வயதான இல.கணேசனுக்கு கிடைத்திருக்கிறது.. மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக தமிழகத்தை சேர்ந்த முன்னாள் பாஜக தலைவரும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரான இல கணேசன் அவர்கள் நியமனம் செய்யப்பட்டு இருக்கிறார்.. விரைவில் மணிப்பூர் மாநிலத்தின் ஆளுநராக அவர் பதவி ஏற்பார்..

Categories

Tech |