தமிழகத்தைப் பொறுத்தவரை சமீப நாட்களாக, குறிப்பாக கடந்த மூன்று நாட்களில் மட்டும் 15 இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்று இருக்கிறது.
குறிப்பாக பாஜக, ஆர்எஸ்எஸ் மற்றும் இந்து முன்னணி பிரமுகர்கள் இருக்கக்கூடிய வீடு, அதே போல் கட்சி அலுவலகம் உள்ளிட்ட இடங்களை குறிவைத்து இந்த தாக்குதலானது நடத்தப்பட்டு வருகிறது. கோவை மாநகரில் மட்டும் கடந்த மூன்று நாட்களில் ஐந்து இடங்களில் பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்றிருக்கிறது. மேட்டுப்பாளையத்தில் இரண்டு இடத்திலும், ஈரோட்டில் இரண்டு இடத்திலும், அதேபோல சென்னைக்கு அருகில் தாம்பரத்தில் ஒரு இடத்திலும், இந்த பெட்ரோல் குண்டு வெடிகுண்டு வீச்சு நடைபெற்றுள்ளது.
இது தொடர்ச்சியாக நடைபெற்று வரக்கூடிய நிலையில் போலீசார் செய்வதறியாது திகைத்து வருகிறார்கள். கோவை நகரிலிலே அதிகமான பெட்ரோல் குண்டு வீச்சு நடைபெற்று இருக்கக்கூடிய காரணத்தால், சர்ச்சைக்குரிய இடங்கள் மற்றும் பாதுகாப்பு கொடுக்க வேண்டிய இடங்கள், எந்தெந்த இடத்தில் அசம்பாவிதங்கள் நடைபெறலாம் என்று போலீசார் கணித்துள்ளார்களோ, அந்த இடங்களுக்கு எல்லாம் கூடுதல் முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
குறிப்பாக இரவு நேர சோதனை எல்லாம் மிகத் தீவிரமாக கண்காணித்து வருகிறார்கள். மாவட்ட கண்காணிப்பாளர் இதற்காக தனியாக தனிப்படை அமைத்து தொடர்ந்து, இந்த தேர்தல் வேட்டையை நடத்தி வருகின்றார். தொடர்ந்து மூன்று நாட்களாக இந்த பெட்ரோல் குண்டு வீச்சு என்பது தமிழகத்தில் மிகப்பெரிய பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.