முதலமைச்சரின் வீட்டின் முன்பு இரண்டு பெண்கள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சென்னையில், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் வீட்டின் முன்பு இரண்டு பெண்கள் தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. இதில் தூத்துக்குடியை சேர்ந்த கிருஷ்ணம்மா(65) பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். மேலும் இன்னொரு பெண்ணான மீனாம்பிகை(31) தன்னுடைய கழுத்தை இறுக்கி தற்கொலைக்கு முயன்றுள்ளார்.
இவர்கள் இருவரும் தூத்துக்குடியிலிருந்து முதல்வர் எடப்பாடி பழனிசாமியை சந்திக்க வந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கு முதல்வரை சந்திக்க அனுமதி மறுத்ததால் தற்கொலைக்கு முயன்றதாக தகவல் வெளியாகி உள்ளது.