சென்னை வானிலை ஆய்வு மையம் இன்று வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டி உள்ள பகுதிகளில் மேல் நிலவக்கூடிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சியின் காரணமாக அடுத்த 48 மணி நேரத்தில் இலங்கைக்கு அருகே ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி, இது 9 முதல் 11ஆம் தேதி வரை வடமேற்கு திசையில் நகர்ந்து, தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை நோக்கி நகரும் என சென்னை வானிலை மையம் தெரிவித்திருக்கிறது.
வரக்கூடிய இந்த வார இறுதி நாட்கள் என்பது மழைக்கான நாட்களாக இருக்கும் என்று நமக்கு தெரிகிறது. சென்னை பொறுத்தவரை அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டு இருக்கின்றது. சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கக்கூடிய தகவலின் அடிப்படையில் வரும் 9ஆம் தேதி முதல் 12 ஆம் தேதி வரை தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை இருக்கும் என தெரிய வருகிறது.