தமிழகத்தில் இ-பதிவு செய்யாமல் வெளியே வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கடந்த இரண்டு மாதங்களாக கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. இதன் காரணமாக தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை முழு ஊரடங்கு என்ற உத்தரவை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் வெளியிட்டிருந்தார். இதைத்தொடர்ந்து மே 17ஆம் தேதி முதல் மாவட்டம் விட்டு மாவட்டம் செல்வதற்கு இ-பதிவு முக்கியம் என்ற அறிவிப்பும் வெளியாகியிருந்தது.
இந்நிலையில் தமிழகத்தில் இ-பதிவு செய்யாமல் வெளியில் வந்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூடுதல் காவல் ஆணையர் கண்ணன் தற்போது தெரிவித்துள்ளார். இ-பதிவு இல்லாமல் வந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும். போலி காரணங்களை கூறி கொண்டு வெளியே வருபவர்கள் மீது எஃப் ஐ ஆர் பதிவு செய்யப்படும். சிறை தண்டனை கிடைக்க கூட வாய்ப்புள்ளது என அவர் கூறியுள்ளார்.