தமிழகத்தில் ஜனவரி 19 முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பள்ளிகள் திறக்கப்படும் என்று அறிவிப்பு வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் ஜனவரி 19 முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார். ஒரு வகுப்பறைக்கு 25 மாணவர்களுக்கு மிகாமல் செயல்படலாம் என்றும், பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கான விடுதிகளும் செயல்பட அனுமதிக்க படுவதாகவும் தெரிவித்துள்ளார். அரசு வெளியிடும் வழிகாட்டு நெறிமுறைகளை உட்பட்டும், செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில் பள்ளிக்கு வரும் மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க வைட்டமின் மற்றும் துத்தநாக மாத்திரைகள் வழங்க சுகாதாரத் துறைக்கு உத்தரவிட்டுள்ளார்.
கருத்து கேட்பு கூட்டத்தில் பங்கேற்ற பெரும்பாலான பெற்றோர்கள் பள்ளிகளை திறக்க கூறியதால் தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாகவும், மாணவர்களின் நலன் கருதி பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார். ஆசிரியர்களும், பெற்றோர்களும் மாணவர்களும் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி வேண்டுகோள் விடுத்துள்ளார்.