Categories
மாநில செய்திகள்

BREAKING: தமிழகத்தில் 24 மாவட்டங்களில்… அரசு அதிரடி அறிவிப்பு…!!!

தமிழகத்தில் உள்ள 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பல மாவட்டங்களில் உள்ள அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து உத்தரவிட்டு வருகிறார். அதுமட்டுமில்லாமல் பல மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர்களை நியமனம் செய்துள்ளார். இன்று தமிழகத்தில் 24 மாவட்டங்களுக்கு புதிய ஆட்சியர் நியமனம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி சென்னை ஆட்சியராக ஜெயரானி, திருவள்ளூர் ஆட்சியராக ஆல்பி ஜான் வர்கீஸ், விழுப்புரம் ஆட்சியராக மோகன் நியமனம், புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியராக கவிதாவும், இராமநாதபுரம் மாவட்ட ஆட்சியராக கோபால சுந்தரராஜுவும் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியராக தினேஷ் பொன்ராஜ்ம் நியமனம், கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியராக ஜி.எஸ்.சமீரன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியராக ராகுல்நாத், காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக ஆர்த்தி, தேனி மாவட்ட ஆட்சியராக கே.வி.முரளிதரன், நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியராக அருண் தம்புராஜ், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியராக முருகேஷ், வேலூர் மாவட்ட ஆட்சியராக குமாரவேல் பாண்டியன் நியமனம், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியராக பி.என்.ஸ்ரீதர், திருவள்ளூர் மாவட்ட ஆட்சியராக ஆல்பி ஜான் வர்க்கீஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

Categories

Tech |