தமிழகத்தில் ஆம்புலன்ஸ்களுக்கு கட்டணத்தை நிர்ணயித்து தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கடந்த மாதம் முதலே கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமாக வரை வருகிறது. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு தமிழக அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் மே 10ஆம் தேதி முதல் 24 ஆம் தேதி வரை ஊரடங்கு என்ற அறிவிப்பையும் வெளியிட்டுள்ளது. இது ஒருபுறமிருக்க பல மாநிலங்களிலும் நோயாளிகளை ஏற்றிச் செல்லும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு ஆம்புலன்ஸ் டிரைவர்கள் அதிக அளவு கட்டணத்தை வசூலித்து வருவதாக புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளது. எனவே இவற்றை சரி செய்வதற்கு தமிழக அரசு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு கட்டணத்தை நிர்ணயித்து உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஆம்புலன்சில் உள்ள வசதிகளைப் பொறுத்து ரூ.1,000-ல் இருந்து ரூ.4000 வரை கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளை ஏற்றிச் செல்லும் சாதாரண ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு, முதல் 10 கிலோ மீட்டருக்கு ரூபாய் ஆயிரமும், சாதாரண ஆம்புலன்சில் 10 கிலோ மீட்டருக்கு மேல் ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் தலா 25 ரூபாயும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.